Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஓகஸ்ட் 25 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சதீஸ்
பொகவந்தலாவ - செல்வகந்த தோட்ட பகுதியில், தனது தாயை கல்லால் தாக்கிய 11 வயது சிறுவனுக்கு, பொகவந்தலாவ பொலிஸாரால், நேற்று (24) மாலை பிணை வழங்கப்பட்டுள்ளதாக, பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்தசிறுவனுக்கு அவருடைய தாய் மிளகாய் தூள் எறிந்ததன் காரணமாக அத்திரமடைந்த சிறுவன், தனது தாயை கல்லால் தாக்கியுள்ளார்.
இதில், படுகாயமடைந்த தாய் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவன், அயல் வீடுகளில் வேலை செய்து தனது தாய்க்கும் தங்கைக்கும் உணவுத் தேடி கொண்டு வந்து கொடுப்பதாகவும் தனது தாயின் வலது கையில் நரம்பு முறிவு ஏற்பட்டுள்ளமையால், தொழில் புரிய முடியாது எனவும், விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அத்துடன், சிறுவனின் தந்தை கொழும்பில் பணிபுரிந்து வருவதாகவும் இரண்டு அல்லது ஒரு வருடங்களுக்கு ஒரு முறை வந்து தனது பிள்ளைகளைப் பார்த்துவிட்டு செல்வதாகவும் தெரிவிக்கபடுகிறது.
தான் பாடசாலைக்குச் செல்வதில்லையெனவும் தான் பாடசாலை செல்ல ஆசையாக இருந்தாலும் எனக்கு கற்றல் உபகரணங்களைப் பெற்றுதர எவரும் இல்லையெனவும் குறித்த சிறுவன் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த சிறுவனின் வீட்டில் சமைத்து உண்பதற்கான வசதிகள் கூட இல்லையென, பிரதேசமக்கள் தெரிவிக்கின்றனர்.
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago