Editorial / 2026 மார்ச் 18 , மு.ப. 08:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஜலீல்
உக்குவளை தாருல் ஹிக்மா கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான ஐந்து நாள் விசேட பயிற்சி நெறி அண்மையில் வெற்றிகரமாக நிறைவுற்றது.
கடந்த 4ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை நடைபெற்ற இப்பயிற்சி நெறியில்; ஒழுக்கப் பண்பு, இலக்கு நிர்ணயம், நிர்வாகம், நேர முகாமைத்துவம், திறன் விருத்தி மற்றும் தலைமைத்துவம் ஆகிய துறைகள் உள்வாங்கப்பட்டிருந்தன. இத்துறை சார்ந்த மார்க்க அறிஞர்கள் மற்றும் கல்வியியலாளர்களினால் இப்பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
பயிற்சி நெறியை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, கடந்த வாரம் உக்குவளை அஜ்மீர் தேசிய பாடசாலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாத்தளை வைத்தியசாலை வைத்தியர் ஏ.எம். அமீர் கலந்துகொண்டார். அத்துடன், விசேட அதிதிகளாக உக்குவளை அஜ்மீர் தேசிய பாடசாலை அதிபர் எச்.எம். சாதாத், ஆசிரியர் எம். மபாஸ் உள்ளிட்ட பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தனர்.





7 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
1 hours ago
2 hours ago