2025 மே 19, திங்கட்கிழமை

தாழ்நிலப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 04 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா 

மலையகத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையினால் நீரேந்தும் பகுதிகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்வடைந்து வருகிறது.

இதற்கமைய, விமலசுரேந்திர நீர் மின் நிலையத்திற்கு நீர் வழங்கும் காசல்றி நீர்தேக்கத்தோடு இணையும் கெசல்கமுவ ஓயா, ஹட்டன் ஓயா ஆறு என்பன  பெருக்கெடுத்துள்ளமையினால் காசல்றி நீர்தேக்கத்தின் நீர்மட்டம் வெகுவாக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் நீர்த்தேக்கத்தின்  வான் கதவுகளுக்கு மேல் நீர் நிரம்பி வழிவும் தருவாயில் உள்ளது.

எனவே, காசல்றி நீர்தேக்க தாழ் நிலப் பகுதிகளில்  வசிப்பவர்கள், மிகுந்த அவனாதனத்துடன் இருக்குமாறு மின்சார சபையினர் வேண்டுகோள் விடுக்கின்றனர். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X