Freelancer / 2023 ஏப்ரல் 09 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர் வரும் தமிழ்-சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, நுகர்வோருக்கு நல்ல பொருட்களை விற்பனைச்செய்ய வேண்டும் என்றவகையில், பொதுசுகாதார அதிகாரிகள் தலவாக்கலை நகரில் சனிக்கிழமை (08) திடீர்சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
கொட்டகலை பொதுசுகாதார பரிசோதகர்கள் காரியாலயத்தின் அதிகாரிகளால் இந்த திடீர்தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அத்தியாவசிய பொருட்கள் விற்பனைச்செய்யும் மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள், உணவகங்கள் மற்றும் பேக்கரிகள் ஆகியன சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.சுதர்ஷன் தலைமையிலான பொதுசுகாதார அதிகாரிகள் மற்றும் தலவாக்கலை-லிந்துல நகரசபையின் பொதுசுகாதார அதிகாரிகள் இணைந்தே இந்த தேடுதலை மேற்கொண்டனர்.
35 minute ago
15 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
15 Jan 2026