2025 ஜூலை 05, சனிக்கிழமை

திருடர்களின் கைவரிசை அதிகரிப்பு

Editorial   / 2017 நவம்பர் 12 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சுஜிதா

லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெயார்வெல், கெளலினா மற்றும் மட்டுக்கலை ஆகிய தோட்டங்களில், கடந்த சில தினங்களாக, திருடர்களின் கைவரிசை அதிரித்துள்ளதாக, பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேற்படி பகுதிகளிலுள்ள வீடுகளில், பெறுமதிவாய்ந்த பொருட்களை கொள்ளையடித்துச் செல்லும் நடவடிக்கையில், திருடர்கள் ஈடுபட்டுள்ளனரெனவும், பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை, மேற்படித் தோட்டங்களிலுள்ள சில வீடுகள் உடைக்கப்பட்டு, அங்கிருந்த தங்க நகைகள் மற்றும் வீட்டு உபகரணங்கள் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளனவென, பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய எவரும், இதுவரை கைதுசெய்யப்படவில்லை என்று தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .