Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 13 , மு.ப. 07:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.சுந்தரலிங்கம்
கொட்டகலை நகரில் திருட்டு சம்பவத்தில் ஈடுப்பட்ட இருவர், சிசிடிவி கமெராவில் பதிவான காணொளிகளை அடிப்படையாக வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என, திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மாதம் 10ஆம் திகதி இரவு, கொட்டகலை நகரில் உள்ள வர்த்தக நிலையமொன்றின்
உரிமையாளர் வெளியில் சென்ற போது, குறித்த இருவரும் கடைக்குள் புகுந்து கைவரிசையைக் காட்டியுள்ளனர்.
பின்னர், சந்தேகநபர்கள் ஓட்டோவொன்றில் ஏறி, ஹட்டன் நோக்கி செல்லும் காட்சிகளும் குறித்த ஆட்டோ சாரதியுடன் மற்றுமொருவர் உரையாடும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.
இந்த ஆதாரங்களை அடிப்படையாக வைத்து பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளுக்கமை, நேற்று முன்தினம் (11) மாலை கைதுசெய்ததுடன், சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
7 hours ago
8 hours ago
20 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
20 Jan 2026