R.Maheshwary / 2021 ஜூன் 16 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. மஹிந்தகுமார்
இரத்தினபுரி- தெனாகந்த பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள உப தபாலகமானது நிர்மாணிக்கப்பட்டிருந்த அன்றிலிருந்து மூடப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
தெனாகந்த, பம்பரலகந்த, மூக்குவத்த மேற்பிரிவு, கீழ் பிரிவு, வேவல்கெட்டிய ஆகிய ஆறு தோட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாவனைக்காக குறித்த உப தபால் நிலையம் நிர்மாணிக்கப்பட்டு, 2003ஆம் ஆண்டு, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பெ. சந்திரசேகரனால் திறந்து வைக்கப்பட்டது.
எனினும் அதன் பின்னர், குறித்த தபால் நிலையம் பயன்படுத்தப்படாமல் மூடி வைக்கப்பட்டு, தற்போது பழுதடைந்து உடைந்து விழும் நிலைக்கு வந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே உபதபாலகம் ஒன்று இன்மையால், குறித்த பிரதேச மக்கள் பாரிய சிரமங்களை எதிர்கொள்வதுடன், அவர்களுக்கான தபால், நேர்முகப் பரீட்சைகள் தொடர்பான கடிதங்கள் உரிய நேரத்துக்குக் கிடைக்காமையால், தாம் பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்வதாக இம்மக்கள் தெரிவிக்கின்றனர்.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago