2025 ஜூலை 10, வியாழக்கிழமை

தீபாவளி முற்பணம் வழங்காத தோட்டங்களுக்கு எதிராக நடவடிக்கை

Editorial   / 2017 ஒக்டோபர் 17 , மு.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எஸ்.கணேசன் 

“தீபாவளி முற்பணத்தை வழங்காத தோட்டங்களுக்கு எதிராக, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கவுள்ளது” என, மத்திய மாகாண விவசாயத்துறை மற்றும் தமிழ்க் கல்வி அமைச்சர் மருதபாண்டி ரமேஷ்வரன் தெரிவித்தார். 

தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக, அரசாங்கத்துடனும் கம்பனி நிர்வாகங்களுடனும் பேசி, ஒவ்வொரு தோட்டத் தொழிலாளிக்கும் 7,500 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரையான முற்பணத்தை, கடந்த காலங்களில் இ.தொ.கா பெற்றுக்கொடுத்துள்ளது. 

“ஆனால், இவ்வருடம் பல தோட்ட நிர்வாகங்கள், தோட்டத் “தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணம் 10,000 ரூபாய் வழங்கவில்லை என்று, எமது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.  

“இவ்வாறு தீபாவளி முற்பணத்தை வழங்காத தோட்டங்களுக்கு எதிராக, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எதிர்வரும் காலங்களில் மாற்று நடவடிக்கை எடுக்கவுள்ளது” என்று, அவர் மேலும் கூறினார்.   

               


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .