Editorial / 2018 பெப்ரவரி 15 , பி.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ்
நுவரெலியா, மாக்கஸ் தோட்டப் பகுதி சிறுவர் பராமரிப்பு நிலையம், கடந்த திங்கட்கிழமை (12) தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்ட நால்வரையும், எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, நுவரெலியா மாவட்ட நீதவான் புபுது ஜெயரத்ன, நேற்று மாலை உத்தரவிட்டார்.
17 வயதுடைய சிறுவன் உட்பட நால்வரே, இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த தோட்டப் பகுதியில் உள்ள சிறுவர் பாரமரிப்பு நிலையத்துக்குத் தீ வைக்கப்பட்டதனால், சிறுவர் நிலையத்துக்கு முன்பாக அமைக்கப்பட்ட நீர் இறைக்கும் இயந்திரம் ஒன்று முற்றாக எரிந்துள்ளதுடன், தோட்ட மக்கள் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் பெரும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago