2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர் கைது

Kogilavani   / 2021 பெப்ரவரி 23 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

சு.சுரேந்திரன்   

பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  இங்குருகடுவ கொஸ்கொல பகுதியில், நேற்று (22) பொதுமக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நபர், பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

பசறை இங்குருகடுவ கொஸ்கொல பகுதியில், இருசாராருக்கு இடையே மிக நீண்ட நாட்களாக ஏற்பட்டு வந்த தண்ணீர் தொடர்பான பிரச்சினை கைகலப்பில் முடிந்துள்ளது. 

இதன்போது ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த உள்ள10ர் துப்பாக்கியை எடுத்து, துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார் என்றும் குறி தவறியதால், தெய்வாதீனமாக உயிரிழப்புகள் ஏதுவும் ஏற்படவில்லை என்றும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், சந்தேக நபர் ஊர் மக்களால் சுற்றி வளைக்கப்பட்டு  பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மேற்படி நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X