2025 மே 15, வியாழக்கிழமை

தேர்தலுக்காக ‘டெலிபோன்’ தொடர்ந்தும் ஒலிக்கும்

Freelancer   / 2023 பெப்ரவரி 22 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 மொஹொமட் ஆஸிக்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பெற்றுக்கொள்வதற்காக ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்தும் போராட்டத்தை நடத்தும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ. ஹலீம் தெரிவித்தார்.

கண்டியில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 “உள்ளூராட்சி மன்றத்  தேர்தலுக்கான அனைத்து ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை பூர்த்தி செய்த  பின்ன​ர் அதனை பிற்போடுவதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சிகள் கண்டனத்துக்கு உரியது” என்றார்.

நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையான தேர்தலை பெற்றுக்கொள்வதற்காக ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்து  பாரிய போராட்டங்களை  நடாத்தும்  தற்போதைய  கூட்டு அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் எவ்வித ஆதரவும் இல்லை. அதனால்தான்,  அவர்கள் தேர்தலை பிற்போட முயற்சிக்கின்றனர் என்றார்.  

 பணம் இல்லாததே காரணம் என்று அரசாங்கம் கூறினாலும்   நிதி பற்றாக்குறை ​தொடர்பிலான எவ்விதமான அடையாளங்களையும் மக்கள் காணவில்லை.  அன்றாட தேவைகள் அனைத்துக்கும் அரசாங்கம் நிதியை செலவிடுகின்றது. ஆகையால் நிதி இல்லாததுதான் பிரச்சினை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் சின்னம் டெலிபோன் என்பது குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .