Ilango Bharathy / 2021 ஜூன் 23 , மு.ப. 07:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜயக்குமார் ஷான்
மொனராகலைப் பகுதியில் மேய்ச்சலுக்கு விடப்படும் மாடுகளை கடத்திச் சென்று
இறைச்சியாக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
இதற்கமைய, மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரகலை- பன்சல்வத்த பகுதியில் நேற்று (22) மாடு ஒன்று கடத்தப்பட்டு, கடத்தப்பட்ட இடத்திலேயே வெட்டப்பட்டுள்ளதுடன், அதன் கழிவுகள் அங்கேயே வீசப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் மொனராகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத்
தெரிவித்துள்ளனர்.
எனினும் கடந்த காலங்களிலும் இவ்வாறான பல சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில்,
இதுவரை இந்த சம்பவங்கள் குறித்து எவரும் கைதுசெய்யப்படவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago