Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 ஓகஸ்ட் 30 , மு.ப. 06:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 104ஆவது ஜனன தினத்தையொட்டி, தொண்டமான் வார வேலைத்திட்டம் என்ற தொனிப்பொருளில், ஐந்து அம்ச வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக, சௌமிய இளைஞர் நிதியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில், சௌமிய இளைஞர் நிதியத்தின் தலைவர் எஸ்.பி.அந்தோனிமுத்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலம் கூறியுள்ளதாவது,
“அண்ணல் மகாத்மா காந்தியின் அகிம்சைவழி போராட்டத்தின் மூலம் பிரார்த்தனை என்ற அறவழிப் போராட்டத்தை நடத்தி, மலையக மக்களுக்கு பிரஜா உரிமை மற்றும் வாக்குரிமையை, அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் பெற்றுக்கொடுத்தார்.
“அவரால் பெற்றுக்கொடுக்கப்பட்ட இந்த உரிமையை, அரசியல் அமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்தின்மூலம் இராஜதந்திர முறையில் பறிக்கொடுக்கவோ அல்லது மலையக மக்களுக்குறிய பிரதிநிதித்துவத்தை பறித்தெடுக்கவோ இடமளிக்கப்போதில்லை.
“அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானால், உருவாக்கப்பட்ட சௌமிய இளைஞர் நிதியம், அன்னாரது 104அவது பிறந்த தினத்தையொட்டி, வழமைப்போன்று பல்வேறு நிகழ்வுகளை ஒழுங்கு செய்துள்ளது. அதற்கமைவாக, தொண்டமான் வார வேலைத்திட்டம் இன்றுமுதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
“அத்துடன், அவரது ஆத்ம சாந்திக்காக, மௌன பிரார்த்தனை மற்றும் ஆன்மீக நிகழ்வுகள், எட்டியாந்தோட்டையில் இன்று நடத்தப்படவுள்ளன. மேலும், அரசியல் அமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்தின் கீழ், மலையக மக்களது பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது.
“2018ஆம் ஆண்டுக்கான பாதீட்டில், தோட்டத் தொழிலாளர்களது சம்பள உயர்வு மற்றும் அம்மக்களுக்கு சமூக, பொருளாதார, கல்வி, கலை, கலாசார, சுகாதார, குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு, போதியளவு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று, நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிடம் வேண்டுகோள் விடுக்கவுள்ளோம்.
“மலையகத்துக்கு வெளியே, கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் தொழில்புரியும் இளைஞர்களது வாக்குப் பதிவு, வாக்களிக்கும் வகையிலான வசதி வாய்ப்பபுக்களை உறுதிசெய்வதுடன், அவர்கள் முகங்கொடுக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வுக்கான, அரச-அரசார்பற்ற அமைப்புகளுடன் இணைந்து, வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.
“கண்டி, பல்லேகலை மைதானத்துக்கு, இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முத்தையா முரளீதரனின் பெயரை சூட்டுவதற்கும், அதேபோன்று நோர்வூட் விளையாட்டு மைதானத்துக்கு, அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயரை சூட்டுவதற்கும், சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் கலந்துரையாடவுள்ளோம்.
“மலையகத் தமிழ் ஊடகவியாலாளர்களைக் கொண்ட ஒரு பொது அமைப்பை ஏற்படுத்தி, அவர்களுக்கென்று பல வேலைத் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம். அத்துடன், எதிர்காலத்தில் மலையகத்திலிருந்து படித்து வெளியேறும் இளைஞர், யுவதிகளை தலைசிறந்த ஊடகவியலாளர்களாக உருவாக்குவற்கான பயிற்சி உள்ளிட்ட பல வேலைதிட்டங்களை, அரச-அரசசார்பற்ற அமைப்புகளுடன் இணைந்து செயற்படுத்த உள்ளோம்” என்றார்.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago