Ilango Bharathy / 2021 ஜூன் 30 , மு.ப. 08:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி. பெருமாள்
சாமிமலை- மல்லியப்பு தோட்டத்தில் உள்ள தொலைத் தொடர்பு கோபுரத்தில் இணைக்கப்பட்டிருந்த 24 மின்கலங்கள்( பெற்றரிகள்) களவாடப்பட்டுள்ளதாக, மஸ்கெலிய பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் (28) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பிராந்திய தொலைத் தொடர்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மின்தடை ஏற்படும் போது, இக்கோபுரம் செயற்படுவற்காக, பொருத்தப்பட்டிருந்த மின்கலங்களே இவ்வாறு களவாடப்பட்டுள்ளதுடன்,இவற்றின் பெறுமதி இன்னும்
மதிப்பிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில், மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆரியரத்ன பண்டாரவின் ஆலோசனையின் கீழ், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவ இடத்துக்கு நேற்று (29) காலை கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, விசாரணைகள்
முன்னெடுக்கப்பட்டுள்ளன.
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago