Ilango Bharathy / 2021 செப்டெம்பர் 28 , மு.ப. 08:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
பெருந்தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதார தொழில், மற்றும் தொழில் உரிமைகள் உள்ளிட்ட நலன்புரி விடயங்களில் தோட்ட முகாமைத்துவ நிர்வாகங்கள் தான்தோன்றிதனமாக
செயற்படுவதற்கும்,தொழிலாளர்களை நசுக்குவதற்கும் வழிசமைத்து கொடுத்தது
தொழிற்சங்கங்களே என பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் முன்னாள் தலைவர் வீ.புத்திரசிகாமணி தெரிவித்துள்ளார.
இது தொடர்பாக நேற்று (27) காலை அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும்
தெரிவித்துள்ளதாவது, தன்னை பொருத்தவரையில் இன்றும்,எதிர்வரும் காலத்திலும் பெருந்தோட்ட தொழிலாளர்களை பெருந்தோட்ட கம்பனிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டுமானால், கூட்டு ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதுவே காலத்தின் கட்டாயம் என்பதை தொழிற்சங்கங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்றார்.
இன்று தொழிலாளர்களை வழிநடத்தும் தொழிற்சங்கங்களுக்கும் அதேபோல தோட்டங்களை
முகாமைத்துவம் செய்யும் தோட்ட கம்பனிகளுக்குமான தொடர்புகள் அற்றுபோயுள்ளன என்பது தொழிலாளர்கள் அனுபவித்து வரும் சொல்லன்னா துயரங்களிலிருந்து தெரிந்து கொள்ள கூடியதாக இருக்கிறது.
கூட்டு ஒப்பந்தம் இல்லாத காரணத்தாலும், தொழிற்சங்கங்களுக்கான சந்தா பிடிப்பு அற்று போனதாலும், தொழிற்சங்கங்களுக்கும்,தோட்ட நிர்வாகத்திற்கும் இடையிலான விரிசல் காணப்படுவதாலும் ஏற்பட்டுள்ள நிலையே இன்று தொழிலாளர்கள் பல்வேறு கெடுப்பிடிகளுக்கு தொழிலாளர்கள் முகம் கொடுக்க நேரிட்டுள்ளது.
ஆகையால் கூட்டு ஒப்பந்த நடைமுறை விடயம் தொடர்பில், தொழிற்சங்கங்கள் அறிவை மேலும் வளர்த்துக் கொண்டு, மீண்டும் ஒப்பந்த செயற்பாட்டுக்கு வரவேண்டும். இது மக்கள் நலன் கருதியே அமைய வேண்டும் என்பதை அனைவரும் உணர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .