2025 ஜூலை 16, புதன்கிழமை

தொழிற்சங்க கலந்துரையாடல்

Janu   / 2023 ஓகஸ்ட் 22 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொழில் அமைச்சினால் முன் வைக்கப்பட உத்தேசிக்கப்படவுள்ள புதிய தொழிலாளர் சட்டத் திருத்தங்கள் தொடர்பாக நாட்டில் உள்ள முக்கிய தொழிற்சங்கங்களுக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 26 ஆம் திகதி சனிக்கிழமை பி.ப. 2.00 மணிக்கு நுவரெலியாவில் உள்ள தோட்ட சேவையாளர் சங்கக் காரியாலயத்தில் இடம்பெறவுள்ளதாக, இக் கலந்துரையாடலின் ஏற்பாட்டாளரும், ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான ஆ.முத்துலிங்கம் தெரிவிக்கின்றார்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்; உத்தேசம் தொழிலாளர் சட்டத் திருத்தத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் உட்பட பெரும்பாலான தொழிற்துறைகளில் கடமையாற்றி வரும் தொழிலாளர்களின் தொழில் உரிமைகளுக்கு பாரிய பாதிப்பு ஏற்படும். 

இதனைக் கருத்திற் கொண்டு தொழிலாளர்களின் தொழில் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் இடம்பெறும் இக்கலந்துரையாடலில் மலையக தொழிற்சங்கங்கள்,வங்கி,  ஆடைத் தொழிற்சாலைகள், கல்வி மற்றும் கைத்தொழில் பேட்டைகளில் கடமையாற்றும் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல முக்கிய தொழிற்சங்கங்களின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.  கலந்துரையாடலின் பின்னர் எமது ஒன்றிணைந்த எதிர்கால செயற்பாடுகள் குறித்து தீர்மானிக்கப்படும் என்றார்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .