R.Maheshwary / 2021 ஜூன் 01 , பி.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரா.யோகேசன்
கொரோனா பரவலால் நாட்டில் தற்போது அமுல்படுத்தப்படும் பயணக்கட்டுப்பாட்டால், பெருந்தோட்டங்களில் உள்ள மக்கள் பல்வேறு வகையிலும் அசௌகரியங்களுக்குட்பட்டு வருகின்றனர்.
இச்செயற்பாடு பெருந்தோட்ட மக்களது நாளாந்த இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது.
குறிப்பாக தமக்கு நாளாந்தம் தேவைப்படும் பொருட்களை அரசாங்கம் சத்தோச போன்றவற்றினூடாக பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது.இருந்த போதும் சத்தோச போன்ற நிறுவனங்கள் நகர பகுதியில் வாழும் மக்களுக்கே பயன் தரும்.இருப்பினும் நகரத்திற்கு அப்பால் வாழும் பெருந்தோட்ட மக்கள் தமக்கு தேவையான உணவு பொருட்களை பெற்றுக்கொளள்வதில் பல்வேறு வகையிலும் அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனர்.
குறிப்பிட்ட தொகையான பொருட்களையே குறிப்பட்ட நாட்களுக்கு சேமித்து வைக்க கூடிய நிலை காணப்படுகின்றது.உணவு பொருட்கள் முடிவடைந்த பின் அவற்றை எவ்வாறு பெற்றுக்கொள்வது என சந்தேகம் கொள்வதோடு பெருந்தோட்டங்களில் உள்ள மக்கள் சிக்கல்களையும் சந்தித்து வருகின்றனர்.
நகரத்துக்கு அண்மையில் வாழும் மக்கள் பயனடைந்தாலும் ஏனைய மக்களை பற்றி அரசாங்க இது விடயத்தில் கவனம் செலுத்த தவறியுள்ளதாக மக்கள் கவலையடைகின்றனர்.எனவே பயணக்கட்டுப்பாட்டு காலங்களில் பெருந்தோட்டங்களில் வாழும் மக்கள் உணவு பொருட்களை பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுக்கப்படல் வேண்டுமென;றும் கோரிக்கை விடுக்கின்றனர்.
29 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
9 hours ago