Kogilavani / 2021 பெப்ரவரி 09 , பி.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
பச்சைத் தேயிலை உற்பத்தி உரிமையை தொழிலாளர்களுக்கும் கறுப்புத் தேயிலை உற்பத்தி உரிமையைக் கம்பனிகளுக்கும் வழங்குவதற்கு அழுத்தம் கொடுக்கும்பட்சத்தில் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சம்பள உயர்வு தொடர்பிலான பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்க முடியும் என்று, பேராதனைப் பல்கலைகழக பொருளியற்றுறை போராசியரும் மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமுமான சங்கரன் விஜேசந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, ஆயிரம் ரூபாயை வழங்கக் கம்பனிகள் மறுப்பதற்கு, உற்பத்திச் செலவு அதிகரிப்பு என்ற காரணத்தை காட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு வழங்க முடியாமைக்கு, உற்பத்திச் செலவையும் உலக சந்தையில் நிலவும் தேயிலை விலையையும் காரணம் காட்டும் கம்பனி தரப்புப் பேச்சாளர் ரொஷான் இராஜதுரை, இன்று ஒரு கிலோகிராம் கறுப்புத் தேயிலை, 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகச் சுட்டிக்காட்டி, உற்பத்திச் செலவு அதிகரிப்பாக எடுத்துரைக்கிறார்.
'நாள் ஒன்றுக்கு தொழிலாளி ஒருவர், 18 கிலோகிராம் பச்சை தேயிலையைக் கொய்கிறார். இவ்வாறு கொய்யப்படும் பச்சைத் தேயிலையைக் கறுப்பு தேயிலையாக உற்பத்தி செய்யும்போது, 4 1ஃ2 கிலோகிராம் கறுப்புத் தேயிலை பெறப்படுகிறது. ரொஷான் இராஜதுரை கூறுவதுபோல், 500 ரூபாய்க்கு கறுப்புத் தேயிலை விற்பனை செய்யப்படும் போது, உற்பத்திச் செய்யப்படும் 4 1ஃ2 கிலோகிராம் கறுப்புத் தேயிலைக்கு, 2,250 ரூபாய் கிடைக்கிறது.
'அந்த வகையில், தொழிலாளர் ஒருவர் நாள் ஒன்றுக்கு 2,250 ரூபாய்க்கு உழைக்கிறார். அப்படியாயின், அவர்களுக்கு ஏன் ஆயிரம் ரூபாயை அடிப்படை நாள் சம்பளமாக வழங்க முடியாது?
தொழிலாளர்களின் உழைப்பு, நாளாந்தம் சுரண்டப்படுவதாகத் தெரிவிக்கும் அவர், தொழிலாளர்களின் உழைப்பில் கம்பனி அதிகாரிகள் தங்களின் ஊதியத்தை இலட்சக்கணக்கில் உயர்திக்கொள்ள முடியுமானால், உழைக்கும் தொழிலாளர்களுக்கு ஏன் அவர்கள் கோரி நிற்கும் சம்பள உயர்வை வழங்க முடியாது? என கேள்வி எழுப்பினார்.
'மறுபுறத்தில், தேயிலை உற்பத்திச் செலவு அதிகரிப்புதான் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு முட்டுக்கட்டை என்றால், ஒவ்வொரு தோட்டங்களிலும், தேயிலை நிலங்களைத் தொழிலாளர்களுக்குச் சமமாகப் பிரித்து வழங்கி, உற்பத்தி மற்றும் பராமரிப்பு அந்தஸ்தை தொழிலாளர்களுக்கு வழங்கி, அவர்களைச் சிற்றுரிமையாளர்களாக மாற்ற, கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்' என்றார்.
'அவ்வாறு தொழிலாளர்கள், தேயிலைக் காணிகளுக்கு சிற்றுரிமையாளர்களாகும் போது, தேயிலைத் துறையை வாழ்வாதாரத் தொழிலாகக் கொண்டு, தேயிலை மலைகளை முறையாகப் பராமரிப்புச் செய்து, விளையும் பச்சைத் தேயிலையின் உற்பத்தி செய்யும் உரிமை உடைவர்களாக மாற்ற வேண்டும்.
'இதன்போது, தொழிலாளர்கள் உற்பத்தி செய்யும் பச்சைத் தேயிலை, கம்பனிகள் விலை கொடுத்து வாங்கி, கறுப்புத் தேயிலை உற்பத்தியைக் கம்பனிகள் முன்னெடுக்க முடியும். பச்சைத் தேயிலை உற்பத்தி உரிமையை தொழிலாளர்களுக்கும் கறுப்புத் தேயிலை உற்பத்தி உரிமையைக் கம்பனிகளுக்கும் வழங்கும் அழுத்தமும் வழங்கும் பட்சத்தில், இப்பிரச்சினைக்குத் தீர்வு எட்ட முடியும்' என்று, சங்கரன் விஜேசந்திரன் மேலும் தெரிவித்தார்.
28 minute ago
36 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
36 minute ago
57 minute ago