Editorial / 2018 ஏப்ரல் 19 , பி.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சதீஸ்
தாக்குதலுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தோட்டத் தலைவரை அச்சுறுத்திய நபரொருவரை, பொகவந்தலாவை பொலிஸார், நேற்று (18) மாலை கைதுசெய்துள்ளனர்.
மாத்தளை - இறத்தோட்டை பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளாரென்றும் இவர், மலையக மக்கள் முன்னணியின் ஆதரவாளரென்றும், பொலிஸார் தெரிவித்தனர்.
பொகவந்தலாவை - ரொப்கில் தோட்டப் பகுதியில், காணி விவகாரமொன்று காரணமாக, இ.தொ.காவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தோட்டத் தலைவர், மலையக மக்கள் முன்னணியின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டு, காயங்களுக்குள்ளான நிலையில், பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார்.
இந்நிலையில், தாக்குதல் நடத்திய குழுவினரில் ஒருவரான மேற்படி சந்தேகநபர், நேற்று முன்தினம் (15) மாலை 5 மணியளவில், வைத்தியசாலைக்குச் சென்று, தோட்டத் தலைவரை அச்சுறுத்திவிட்டுச் சென்றுள்ளார்.
இது தொடர்பில், பொகவந்தலாவை வைத்தியசாலை வைத்திய அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் ஊடாக, பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டார்.
8 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago