Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூலை 08 , பி.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
கொழும்பு- ஹட்டன் பிரதான வீதியின் ஹட்டன் மல்லியப்பு சந்திக்கு அருகில் ஜீப் வண்டியொன்று இன்று (8) அதிகாலை 3 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஹட்டனிலிருந்து எபோட்சிலி தோட்டத்தை நோக்கிச் சென்ற ஜீப் வண்டியே இவ்வாறு வடிகான் ஒன்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும், அதிக வேகமே இந்த விபத்துக்கான காரணமென ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பிரதேசத்திலுள்ள தோட்டமொன்றின் உதவி முகாமையாளர் ஒருவரின் ஜீப் வண்டியே விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார், இந்த விபத்தால் குறித்த முகாமையாளரோ வேறு எவரும் காயமடையவில்லை என்ற போதிலும், ஜீப் வண்டி பலத்த சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .