Ilango Bharathy / 2021 ஜூன் 21 , பி.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். கணேசன்
நாளொன்றுக்கு 20 கிலோகிராம் கொழுந்து பறிக்காவிட்டால், 3 நாள்கள் மாத்திரமே வேலை
வழங்கப்படும் என தெரிவித்து, தோட்ட நிர்வாகம் விடுக்கும் மிரட்டலை எதிர்த்து, கொட்டகலை-
டிரேட்டன் டீ.டி. பிரிவு தொழிலாளர்கள் இன்று (21) போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் நாளொன்றுக்கு சம்பளமாக வழங்கப்பட வேண்டும்
என அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், தமக்கு 800 ரூபாவே வழங்கப்படுவதாகவும்
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டினர்.
எனவே தமக்கு விடுக்கும் மிரட்டல்கள் குறித்து தொழிற்சங்கங்கள் உடனடியாக தலையீடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
எனினும் இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த குறித்த தோட்ட முகாமையாளர், ”நாளொன்றுக்கு 20 கிலோகிராம் கொழுந்தைப் பறிக்க வேண்டுமென, நிர்வாகம் முடிவெடுத்துள்ள நிலையில், நிர்வாகம் இருந்தால் தான் தமக்கு வருமானம் என்பதை உணர்ந்து ஒரு டிவிசனைச் சேர்ந்தவர்கள் வேலைக்குச் சென்று, 20 கிலோ கிராம் கொழுந்தைப் பறிப்பதாகவும், டீ.டி டிவிசன் மக்களே இதற்கு ஒத்துழைப்பு வழங்காமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் ”தெரிவித்தார்.

அத்துடன் தேயிலை வளர்ச்சி அதிகம் காணப்படும் நிலையில், நாளொன்றுக்கு 20 கிலோகிராம்
கொழுந்தை பறிக்கலாம் என்றார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago