Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Editorial / 2020 நவம்பர் 09 , பி.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையகப் பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில், தோட்டப் பகுதிகள் சிலவற்றில் தோட்ட நிர்வாகத்தினரும் தோட்டத் தொழிலாளர்களும் இணைந்து சில விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை வரவேற்கத்தக்க விடயம் என்று, தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்துள்ள அவர், தோட்டத் தொழிலாளர்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற நுவரெலியா மாவட்டத்தில், சில பிரதேசங்களில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் அவர்களது குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில், நுவரெலியா மாவட்டத்தில் சில தோட்டங்களுக்குள் வெளியாட்கள் பிரவேசிப்பதைக் கட்டுப்படுத்தும் வகையில், தோட்டத்தின் பிரதான நுழைவாயிலில் பாதுகாப்பு அரண்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றும் அத்துடன் தோட்டத்திலிருந்து வெளியேறுகின்றவர்கள் மற்றும் வருகை தருகின்றவர்களின் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன என்றும் கூறினார்.
இந்த முறைமையை, அனைத்து தோட்ட நிர்வாகமும் தோட்ட மக்களும் பின்பற்றவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago