Janu / 2023 ஜூன் 05 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
தரமான பச்சை தேயிலை கொழுந்து பரிக்கும் போட்டி நேற்று முன்தினம் இடம் பெற்றது. இந்த நிகழ்வை நுவரெலியா மாவட்டத்தில் உள்ள ஹொரன பிலான்டேசனுக்கு உரித்தான 12 தோட்டங்களில் பணி புரியும் பெண் தொழிலாளர்களுக்கு இடையே இடம்பெற்றது.


இந்த போட்டியில் முதலாவது இடத்தைப் பெற்று கொண்ட சாமிமலை பகுதியில் உள்ள ஹொரன பிலான்டேசனுக்கு உரித்தான ஓல்ட்டன் தோட்டத்தை சேர்ந்த என.விக்னேஸ்வரிக்கு ஒரு பவுண் தங்க குற்றியும் ஒரு லட்சம் ரூபாய் பணமும் பரிசாக தோட்ட நிர்வாகம் வழங்கியது,
இரண்டாம் இடத்தைப் பெற்ற சாமிமலை பகுதிகளில் உள்ள மாநெலி தோட்டத்தை சேர்ந்த ஜீ.பெரியம்மாவிற்க்கு அரை பவுன் தங்கம் எழுபத்தி ஜந்து ஆயிரம் ரொக்க பணம் பரிசாக தோட்ட நிர்வாகம் வழங்க பட்டது.

மூன்றாம் இடத்தை பெற்று கொண்ட சாமிமலை பகுதியில் உள்ள ஸ்டாக்ஹோம் தோட்டத்தை சேர்ந்த வீ.இதயவாணிக்கு அரை பவுன் தங்கம் மற்றும் ஜம்பது ஆயிரம் ரூபாய் ரொக்கம் பணம் வழங்கி கௌரவிக்கபட்டனர்.

இவ்வாறான நிகழ்வுகள் வருடாந்தம் இடம் பெற்று வருகிறது. இருந்த போதிலும் பெருமளவு பணம் தங்கம் இம் முறை வழங்க பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக பெருந்தோட்ட தொழிலாளர்களின் பணி மேலும் சிறக்க வாய்ப்பு உண்டு என தோட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

45 minute ago
51 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
51 minute ago
1 hours ago
2 hours ago