Kogilavani / 2020 டிசெம்பர் 09 , பி.ப. 02:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
காமினி பண்டார, எஸ்.சதிஸ், எஸ்.கணேசன்
அக்கரப்பத்தனை எல்பியன் பிரிவுக்கு உட்பட்ட தோன்பீல்ட் தோட்டம் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக, அப்பகுதிக்குப் பொறுப்பான பொதுசுகாதார பரிசோதகர் ஜகத் அபேகுணர்தன தெரிவித்தார்.
அப்பகுதிக்கு பயணக்கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.
மேற்படித் தோட்டத்தைச் சேர்ந்த நபரொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த நபர் தோட்டத்தின் பல பகுதிக்குச் சென்று வந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
மேற்படித் தோட்டத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டுள்ள அந்நபர் அந்நிகழ்வுக்கு வந்த பலருடன் தொடர்பைப் பேணியுள்ளார் என்று தெரியவந்துள்ளது.
இதனையடுத்தே மேற்படித் தோட்டத்தை முற்றாக முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேற்படித் தோட்டத்தில் சுமார் 150 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று, பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
அவர்களை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளாதாகவும் பிசிஆர் பரிசோதனை முடிவுகள் கிடைக்கப்பெற்றவுடன் மேற்படி தோட்டத்தை விடுவிப்பதா என்பதுத் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
22 Jan 2026
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Jan 2026
22 Jan 2026