2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

திகா அணியின் மே தினக் கூட்டம் தலவாக்கலையில்

Gavitha   / 2017 ஏப்ரல் 02 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொழிலாளர் தேசிய சங்கத்தின் மேதினக்கூட்டமும் பேரணியும் இம்முறை தலவாக்கலை நகரசபை மைதானத்தில் நடைபெறவுள்ளதாக, குறித்த சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

மேலும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரம் தலைமையில் இடம்பெறவுள்ள மே தினக்கூட்டத்தில், சங்கத்தின் முக்கியஸ்தர்களும்   நுவரெலியா, கண்டி, மாத்தளை, கேகாலை, பதுளை, இரத்தினபுரி, களுத்துறை, மொனராகலை, கொழும்பு  உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தொழிலாளர் தேசிய சங்கத்தின் அங்கத்தவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர் எனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .