2025 ஜூலை 07, திங்கட்கிழமை

தேசிய துக்கதினத்திலும் திறந்து மூடப்பட்டது

Princiya Dixci   / 2015 நவம்பர் 12 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ 

சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் மறைந்த தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரரின் இறுதிக் கிரியைகளையொட்டி இன்று வியாழக்கிழமை (12) தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. 

நாட்டிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் இறைச்சி விற்பனை நிலையங்களையும் மூடும்படி அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்திருந்தது. 

எனினும், ஹட்டன் பஸ் நிலையத்துக்கு அருகாமையில் கடற்றொழில், நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபன மீன் வியாபார நிலையத்தில் மீன் விற்பனை காலை முதல் நண்பகல் வரை இடம்பெற்றது.

இது தொடர்பாக உரிமையாளரிடம்  வினவிய போது, இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபன தலைமையகத்தில் தனக்கு திறந்து வியாபாரம் செய்யும்படி உத்திரவிடப்பட்டதன் காரணமாகவே தான் திறந்து வியாபாரம் செய்ததாக அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .