2025 ஜூலை 07, திங்கட்கிழமை

தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Sudharshini   / 2015 நவம்பர் 14 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன் , சா. சதீஸ்குமர்

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இஞ்சஸ்றி தோட்ட தொழிலாளர்கள், தோட்ட  நிர்வாகத்துக்கு  எதிராக நேற்று (13) ஆர்ப்பாட்ட்தில்  ஈடுபட்டனர்.

தோட்ட தலைவர்கள் மற்றும் தோட்ட கங்கானி அடங்கலாக 7பேர் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தோட்ட முகாமையாளரை தாக்கியதாக கூறி பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு  அமைய, ஜூலை மாதம் 12ஆம் திகதி தோட்ட கங்கானி, தலைவர் அடங்கலாக 7பேர் நோர்வூட் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர். 7பேருக்கும் தோட்ட நிர்வாகத்தினால் தற்காலிக வேலை நிறுத்தம் செய்யப்பட்டிருந்தது.

எனினும், கடந்த வியாழக்கிழமை (12) மேற்படி 7பேரையும் நிரந்தரமாக வேலையை விட்டு விலக்ககுவதாக  தோட்ட நிர்வாகம் அறிவித்து கடிதங்களை அனுப்பியிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே மேற்படி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .