2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

தீபாவளியை முன்னிட்டு சம்பளத்தை முன்கூட்டி வழங்கவும்

Sudharshini   / 2015 நவம்பர் 01 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ

எதிர்வரும் 10ஆம் திகதி தீபாவளி என்பதால் பாடசாலை மாணவர்களுக்கு 9ஆம் திகதி விடுமுறை வழங்குமாறும் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளத்தை முன்கூட்டியே வழங்குமாறும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர் கணபதி இராமச்சந்திரன் கோரியுள்ளார்.

தீபாவளி தினத்தை முன்னிட்டு 9ஆம் திகதி சப்ரகமுவ மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்து தான் சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சர் பானுமுனிப்பிரிய மற்றும் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய ஆகியோரின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, அரச உத்தியோகத்தர்களுக்குச் சம்பளத்தை முன்கூட்டி பெற்றுக்கொடுக்குமாறு, இரத்தினபுரி தமிழ் ஆசிரியர்கள் தன்னிடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

'எதிர்வரும் 10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தீபாவளி திருநாள் என்பதால் அதற்கு முதல் நாளான 9ஆம் திகதி திங்கட்கிழமை தமிழ் பாடசாலைகளில் மாணவர்களின் வரவு மிகவும் குறைவாகக் காணப்படும். எனவே, 9ஆம் திகதி தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறையை வழங்கி, அந்த விடுமுறைக்குப் பதிலாக பிறிதொரு சனிக்கிழமை தினத்தில் பாடசாலையை நடத்த வேண்டும்' என்றார்.

'சித்திரைத் திருநாளையொட்டி அரசாங்க சேவையாளர்களுக்கு மாதாந்த சம்பளம் முன்கூட்டியே வழங்கப்படுவது போன்று, தமிழர்களின் முக்கிய திருநாளான தீபாவளி திருநாளை முன்னிட்டும் அரசாங்க சேவையாளர்களுக்கு முன்கூட்டி சம்பளம் வழங்கப்பட வேண்டும்' என அவர் மேலும் யுnஉhழசவலியுறுத்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .