Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2015 ஒக்டோபர் 27 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஞ்சித் ராஜபக்ஷ
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஹட்டன் நகரில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஹட்டன் நகரத்துக்கு வரும் மக்களின் நலனை கருத்திற்கொண்டு ஹட்டன் பொலிஸாரும் ஹட்டன்-டிக்கோயா நகர சபையும் இணைந்து இந்நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன.
இதுதொடர்பிலான கலந்துரையாடலொன்று திங்கட்கிழமை ஹட்டனில் இடம்பெற்றது.
ஹட்டன் நகரின் இரண்டாவது பிரதான வீதியிலிருந்து பொது சந்தை வரையிலான வீதியை முழுமையாக மறைத்து அதில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் ஹட்டன் பஸ் நிலையத்துக்கு அருகில் உள்ள பொது சந்தை மற்றும் சில இடங்களிலும் வியாபாரங்களை மேற்கொள்வதற்கும் கலந்துரையாடலின்போது தீர்மானிக்கப்பட்டது.
இரு வழி போக்குவரத்தை ஒரு வழியாக மாற்றி ஹட்டன் பிரதான வீதியின் ஊடாக போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு வாகனங்களை பிரதான நகரில் நிறுத்த முடியாது எனவும் அதற்கு பதிலாக ஹட்டன் ரயில் நிலையத்துக்கு அருகிலுள்ள இடங்களிலும் நிறுத்தலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விசேட பாதுகாப்பு நடவடிக்கையானது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிகமாக முன்னெடுக்கப்படும் ஒன்று என பொலிஸார் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
18 minute ago
54 minute ago