Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Sudharshini / 2015 நவம்பர் 10 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொழிற்சங்க பலத்தைக் கொண்டுள்ள கூட்டொப்பந்தத் தொழிற்சங்கங்கள் தோட்டத் தொழிலாளர்களை வஞ்சம் தீர்ப்பதற்காக தொழிலாளர்கள் மத்தியில் முரண்பாடுகளையும் குரோதங்களையும் தூண்டி வருகின்றன. ஆகையால், கூட்டொப்பந்த தொழிற்சங்கங்களுக்கு எதிராக தொழிலாளர்கள் போராட்டம் நடத்தவேண்டும் என மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
இந்தத் தொழிற்சங்கங்கள் சம்பள அதிகரிப்பு விடயத்தில் தோட்டக் கம்பனிகளுக்கெதிராக கருத்துக்களை வெளியிடாமல் மாற்றணி அரசியல்வாதிகளை தூற்றுவதில் காலம் கடத்தி கொண்டிருக்கின்றார்கள். அந்தத் தொழிற்சங்கங்களின்; பலத்தை எதிர்வரும் டிசம்பர் மாதம் இல்லாமல் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்டத் தலைவர்களுக்காக கொட்டகலையில் இடம் பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது ,கடந்த பொதுத் தேர்தலில் தமிழ் முற்போக்குக் கூட்டணி வேட்பாளராக அமைச்சர் திகாம்பரம் போட்டியிட்ட போது கூட்டணியின் ஆதரவாளர்கள் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை வழங்கி நுவரெலியா மாவட்டத்தில் திகாம்பரத்தை முன்னிலையில் வெற்றி பெறச் செய்தனர்.
இந்த வெற்றியின் ஊடாக அரசியல் ரீதியான பலத்தைப் பெற்றுக் கொடுத்தார்கள். இந்த வெற்றியைத் தொடர்ந்து மலையக மக்களுக்கு என்றுமில்லாத வகையில் சேவையாற்றும் வகையில் புதிய கிராமங்கள் , உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு கிடைத்துள்ளது.
அத்துடன், கடந்த காலங்களில் குறிப்பிட்டதொரு தொழிற்சங்கத்துக்கு மாத்திரம் சேவை வழங்கிவந்த பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிறுவனம் இந்த அமைச்சின் கீழ் வந்துள்ளதால் இன்று மலையகத் தோட்டப்பகுதிகளில் சகலருக்கும் சேவையாற்றும் வாய்ப்பு இந்த நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும், ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிறுவனம் , தொண்டமான் பவுண்டேஸனுக்கு உட்பட்ட நிறுவனங்கள் அமைச்சர் திகாம்பரத்தின் கீழ் வந்துள்ளன. இந்த நிறுவனங்கள் முறையாக பொறுப்பெடுக்கப்பட்டு வெகுவிரைவில் அவற்றின் செயற்பாடுகள் வினைத்திறனுடன் மேற்கொள்ளப்படவுள்ளன.
இவை மலையக மக்கள் எமக்கு வழங்கிய அரசியல் ரீதியான செல்வாக்கால் பெற்றவையாகும். அத்துடன் புத்துயிர் வழங்கப்பட்டுள்ள பத்தாண்டுத்திட்டம் , வீடமைப்புத் திட்டம் போன்றன நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
இந்த நிலையில் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துடன் சம்பந்தப்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்ந்து கூட்டொப்பந்தத்தில் தங்கியுள்ளது.
கடந்த 23 வருட வரலாறைக் கொண்ட கூட்டொப்பந்தத முறையின் மூலம் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை நாட்சம்பளம் இன்று வரை 450 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளமைக்கு கூட்டொப்பந்த தொழிற்சங்கங்களே காரணமாகும்.
இந்தத் தொழிற்சங்கங்கள் கடந்த 23 வருடங்களாக தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பை தோட்டக்கம்பனிகளுக்கு தாரை வார்த்து வந்துள்ளன. தொழிற்சங்க பலத்தைக் கொண்டுள்ள கூட்டொப்பந்தத் தொழிற்சங்கங்கள் தோட்டத் தொழிலாளர்களை வஞ்சம் தீர்ப்பதற்காக தொழிலாளர்கள் மத்தியில் முரண்பாடுகளையும் குரோதங்களையும் தூண்டி வருகின்றன.
இந்த விடயங்களைத் தொழிலாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். சம்பள விடயத்தில் ஏமாற்றும் கூட்டொப்பந்த தொழிற்சங்களுக்கெதிராக தொழிலாளர்கள் போராட வேண்டும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago