Sudharshini / 2015 ஒக்டோபர் 13 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஷ், கு.புஸ்பராஜ்
தலாவக்கலை, ட்ரூப் தோட்டத்தில் தேயிலைத் தொழிற்சாலை சனிக்கிழமை (10) தொடக்கம் எவ்வித அறிவித்தலுமின்றி மூடப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து 300க்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள்; இன்று (13) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை, சனிக்கிழமை பறிக்கப்பட்ட 4,000 கிலோ கொழுந்தும் திங்கட்கிழமை பறிக்கப்பட்ட 5,000 கிலோ கொழுந்தும் தொழிற்சாலையில் பழுதடைந்த நிலையில் இருப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
தொழிற்சாலையிலுள்ள இயந்திரங்கள் பழுதடைந்துள்ளதாகவும் அவற்றை திருத்தியமைக்க தோட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கைகளையும் இதுவரை முன்னெக்க வில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இவ்விடயம் தொடர்பில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மாநில இயக்குநர், தோட்ட முகாமையாளருடன் இன்று (13) கலந்துரையாடியதை அடுத்து, இப்பிரச்சினைக்கு ஒருவரா காலத்துக்குள் தீர்வைப் பெற்றுத்தருவதாக முகாமையாளர் உறுதியளித்துள்ளார்.


9 hours ago
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026