Kogilavani / 2021 ஜனவரி 03 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதத் எச்.எம்.ஹேவா, எம்.கிருஸ்ணா
ஹட்டன்-டிக்கோயா நகரசபையின் உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட நால்வருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக, நகரசபையின் பொதுசுகதார பரிசோதகர் ஆர்.ஆர்.எஸ்.மெதவெல தெரிவித்தார்.
கடந்த 29,30 ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகள், நேற்று (2) வெளியான நிலையிலேயே, நால்வருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
நகரசபையின் உறுப்பினர் ஒருவர், உறுப்பினரின் மகள் மற்றும் இருவருக்கே கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
மேற்படி நால்வரும் தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், இவர்களுடன் தொடர்பைப் பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று, பொதுசுகாதார பரிசோதகர் மேலும் தெரிவித்தார்.
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago