Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 02 , மு.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதத். எச்.எம். ஹேவா
ஹட்டன்- டிக்கோயா நகர சபையின் வாகன தரிப்பிடத்துக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ,கழிவுகள் சுத்திகரிக்கும் வாகனத்தின் பெட்டரிகள் இரண்டு காணாமல் போயுள்ளமை தொடர்பில், விரைவாக விசாரணை நடத்த வேண்டுமென, நகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஏ.பி.அனுரத சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தெரிவித்துள்ள அவர், நகர சபையின் பின்புறமாகவுள்ள வாகன தரிப்பிடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனத்தில் இருந்தே, 50,000 ரூபாய் பெறுமதியான பெட்டரிகள் இரண்டு காணாமல் போயுள்ளதென்று
தெரிவித்துள்ள அவர், குறித்த இடத்தில் நகர சபையில் கடமையாற்றும் 2 காவலாளிகள் மற்றும் தனியார் பாதுகாப்பு பிரிவின் பாதுகாப்பு காவலர் ஒருவரும் கடமையிலிருந்தும் இவ்வாறு பெட்டரிகள் எவ்வாறு காணாமல் போனதென்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
எனினும் இந்த விடயம் குறித்து, இதுவரை பொலிஸ் நிலையத்தில் எவ்வித முறைப்பாடுகளும் செய்யப்படவில்லை என்றும் நகர சபை மட்டத்தில் விசாரணைகள் செய்யப்படுவதாக தெரிவித்த நகர சபையின் தவிசாளர், அந்த விசாரணைகளின் பின்னர், சம்பந்தப்பட்டவர்ளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
7 hours ago
8 hours ago
20 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
20 Jan 2026