Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Sudharshini / 2015 ஒக்டோபர் 26 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.திருஞானம்
ஒரு பிரதேச செயலகத்துக்கு இரண்டு பாடசாலைகள் வீதம், தலா 20 கோடி ரூபாய் செலவில் பாடசாலைகளை, சகல வசதிகளையும் கொண்ட பாடசாலைகளாக அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளது.
'அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை' என்ற தொனிப்பொருளின் கீழ் இச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
இத்திட்டத்தினூடாக மக்கள் நகரபுற பாடசாலைகளை நாடி வருவதை குறைக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
'2016 வரவு-செலவு திட்டத்தில் மொத்த தேசிய வருமானத்தில் 6 சதவீதம் கல்விக்காக ஒதுக்கபடவுள்ள நிலையில், நாட்டின் கல்வியில் பாரிய அபிவிருத்திகள் ஏற்படும். தற்போது 'சுத்திகரிப்பை நோக்கி' என்ற செயற்றிட்டம் ஊடாக 1,200 பாடசாலைகளுக்கு 19 இலட்சம் ரூபாய் செலவில் மலசலக்கூடம் மற்றும் தண்ணீர் வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
7 hours ago
9 hours ago