2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

நடமாடும் தடுப்பூசித் திட்டத்தை விரிவுபடுத்துங்கள்

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 07 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

அரசாங்கம் கொரோனாவை கட்டுப்படுத்த நடைமுறைபடுத்தியுள்ள நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டமானது, மிகவும் வரவேற்கக்கூடிய ஒரு விடயம் என தெரிவித்துள்ள மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமும் பேராசிரியருமான சங்கரன் விஜயசந்திரன், இந்த திட்டத்தை மலையக பெருந்தோட்ட பகுதிகளுக்கும் விரிவுபடுத்த முடியுமாக இருந்தால் அது இன்னும் சிறப்பானதாக அமையும் என்றார்.

இது தொடர்பாக அவர் நேற்று(6) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், பெருந்தோட்ட பகுதிகளில் போக்குவரத்து வசதியின்னை காரணமாகவும் தற்பொழுது நாடு பூராகவும் முடக்கப்பட்டிருக்கின்ற இந்த நிலையில், போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக்
கொள்வதிலும் வயது முதிர்ந்தவர்களை தங்களுடைய இடங்களில் , தடுப்பூசி ஏற்றும் இடங்களுக்கு கொண்டு செல்ல முடியாத ஒரு நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

எனவே, இந்த விடயங்களை கருத்தில் கொண்டு அரசாங்கம் பெருந்தோட்ட பகுதிகளில் நடமாடும் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை விரிவுபடுத்துவதன் மூலமாக அதிகமான நன்மைகளை பெற்றுக் கொள்ள முடியும்.

அதே நேரம் அரசாங்கம் அறிவித்திருக்கின்ற 1906 என்ற நடமாடும் தடுப்பூசி வழங்குவதற்கான இலக்கத்துக்குத் தொடர்பு கொண்டு சேவையை பெற்றுக் கொள்ள முயற்சி செய்கின்ற  சந்தர்ப்பத்தில், அதனை பெற்றுக் கொள்ள முடியாத ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது.

அந்த இலக்கத்தில் பதில் அளிக்கின்றவர்கள் இந்த சேவையானது, தற்பொழுது கொழும்பு கம்பஹா களுத்துறை ஆகிய மாவட்டங்களில் மாத்திரமே செயற்படுத்தப்படுவதாகவும் இந்தநடமாடும் சேவையை பெற்றுக் கொள்வதற்கு தங்களுடைய பகுதியில் இருக்கின்ற சுகாதார அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இது தொடர்பாக சுகாதார பிரிவினரிடமும் முறையான தகவல்கள் இருப்பதாக தெரியவில்லை. எனவே, இதனை பெருந்தோட்ட பகுதிகளிலும் முறையாக நடைமுறைபடுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X