Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Freelancer / 2023 ஜூலை 20 , மு.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள லக்சபான தோட்டம் வாழமளை பிரிவில் , நேற்று மாலை ஒருவர் தன்னுயிரை மாய்த்துக் கொண்டார் என நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர தெரிவித்தார்.
இவ்வாறு தன்னுயிரை மாய்த்துக் கொண்டவர் கோவிந்தசாமி ஜனகன் (வயது 34) திருமணம் முடிக்காத இளைஞர் எனவும், அவரது தந்தை வழங்கிய தகவலின் படி பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதன் பின்னர் ஹட்டன் நீதிமன்ற நீதவானுக்கு அறிவித்ததை தொடர்ந்து நீதவான் உத்தரவின் படி திடீர் மரண விசாரணை அதிகாரி நேரில் வந்து பார்வையிட்ட பின்னர் சடலம் கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இன்று அவரது உடல் பிரேத பரிசோதனை சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் இடம் பெறும் என நல்லத் தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர தெரிவித்தார். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
3 hours ago
3 hours ago