Sudharshini / 2015 ஒக்டோபர் 01 , பி.ப. 02:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஆ.ரமேஷ்
கடந்த 2 வருட காலமாக மத்திய மாகாணத்தில் நடைபெறாமல் இருந்த தமிழ் சாகித்திய விழாவை, எதிர்வரும் நவம்பர் மாதம் 1,2ஆம் திகதிகளில் ஹட்டன் நகரில் நடத்த தீர்மானித்துள்ளதாக மத்திய மாகாண விவசாய, சிறிய நீர்ப்பாசன, விலங்கு உற்பத்தி, கமநல அபிவிருத்தி, மீன்பிடி, சுற்றாடல், இந்து கலாசார, தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் மருதபாண்டி ரமேஷ்வரன் தெரிவித்தார்.
ஹட்டன் சீடா மண்டபத்தில் இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
கடந்த 2 வருடங்களாக மத்திய மாகாணத்தில் தமிழ் சாகித்திய விழா நடைபெறாமல் இருந்தமை தொடர்பில் ஆராயப்பட்டு வந்தது. இது தொடர்பாக மாகாண முதலமைச்சருடனும் செயலாளருடனும் கலந்து ஆலோசிக்கப்பட்டதோடு அமைச்சர் பொறுப்பை நான் ஏற்ற பின் இந்த விழாவினை நடத்துவது தொடர்பாக பல்வேறு வகையில் கலந்துரையாடலும் மேற்கொண்டேன்.
இவ்விழா குறித்த இறுதி தீர்மானம் எதிர்வரும் 7ஆம் திகதி எடுக்கப்படவுள்ளதோடு, மத்திய மாகாண சபை உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் அமைச்சு காரியாலயத்தில் அன்றைய தினம் இடம்பெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.
13 minute ago
27 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
27 minute ago
1 hours ago
2 hours ago