Janu / 2026 ஏப்ரல் 07 , பி.ப. 03:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய அரச பேரவையின் அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தை மீறி, அரசாங்கத்திற்கு சொந்தமான காணி ஒன்றில் கட்டிட நிர்மாண வரைபடத்திற்கு அனுமதி வழங்கிய குற்றச்சாட்டில், நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ் செவ்வாய்க்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர், கடந்த 2021-ஆம் ஆண்டு உரிய நடைமுறைகளை பின்பற்றாமல், விண்ணப்பதாரருக்கு சாதகமான முறையில் குறித்த வரைபடத்திற்கு அனுமதி வழங்கியதன் மூலம் 'ஊழல்' எனும் குற்றத்தை புரிந்துள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago