Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2017 ஒக்டோபர் 30 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
“நாடாளுமன்றத்தின் அதிகாரங்களைக் குறைத்து, மாகாண சபைகளுக்கு கூடிய அதிகாரங்களை வழங்க முயலும் இவ்வாறான நாடாளுமன்றத்தின் மீது, விமல் வீரவன்ச எம்.பி கூறியதைப் போன்று, ஒரு குண்டல்ல, நூறு குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்த வேண்டும்” என்று, முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
ஒன்றிணைந்த எதிரணியின் எம்.பியான திலும் அமுனுகமவின் ஏற்பாட்டில், கண்டி - நுகவெலயில் சனிக்கிழமை இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “இந்நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து சுமார் 70 வருடங்களாக பண்டாரநாயக்க - செல்வா உள்ளிட்ட இன்னும் பல ஒப்பந்தங்கள் மூலமாக, தமிழ் மக்கள் பிரிந்து செல்ல முயற்சித்துள்ளனர். அதில் ஒரு சிறிய நியாயமும் உள்ளது” என்றார்.
“என்னவென்றால், உலகில் 130 மில்லியன் தமிழ் மக்கள் வாழ்கின்றனர். உலகிலுள்ள 193 நாடுகளில் தமிழ் மக்கள் இல்லாத நாடொன்று இல்லை. சகல நாடுகளிலும் தமிழர்கள் வாழ்கின்றனர். இருந்த போதும், தமிழ் மக்களுக்காக, ஒரு நாடு இல்லை. இதனால், அவர்கள் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கையும் மாலைத்தீவுகளின் சில தீவுகளையும் இணைத்து, தனி நாடொன்றை உருவாக்குவதற்கு, அன்றுமுதல் அவர்கள் முயன்று வந்துள்ளனர். இருந்தபோதும், அச்சந்தர்ப்பங்களில் எல்லாம் ஏற்பட்ட பல காரணங்களால், அது தடைப்பட்டது” என்றார்.
“அதன் பின்னர். 30 வருடங்கள் ஒரு கொடூர யுத்தத்துக்கு, நாங்கள் முகங்கொடுத்தோம். அன்று எவருக்கும், ஒரு பயணம் சென்று வருகின்றேன் என்று கூறி, வீட்டைவிட்டு வெளியே சென்றுவரமுடியாது. வீட்டுக்குத் திரும்பி வருவதைத் தீர்மானிப்பவர், எங்கேயோ ஒரு பங்கரில் இருக்கும் ஒரு பயங்கரவாதியாகதான் இருந்தார்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
“ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, நாடாளுமன்றத்தில் விமர்சிப்பதைக் கண்டு நாங்கள் சந்தோசம் அடைகின்றோம். கைதட்டுகின்றோம். இருந்தபோதும், உண்மை அதுவல்ல. இவர்கள், திட்டமிட்டு நாடகமாடுகின்றனர். அநுர குமாரவை அழைக்கும் பிரதமர், இன்று தன்னை விமர்சிக்குமாறும், மறுநாள் ரவி கருணாநாயக்கவை விமர்சிக்குமாறும் மற்றொரு நாளைக்கு, இன்னுமொரு உறுப்பினரை விமர்சிக்குமாறும் அறிவுரை வழங்குகின்றார். அதன்பிரகாரமே, அநுர குமார திஸாநாயக்க எம்.பியும் செய்கின்றார். இவையைனத்துமே நாடகமாகவே உள்ளது. இதனை சாதாரண மக்கள் நம்பிவிடுகின்றனர்” என்றும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago