2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

‘நாட்டில், இனக் கலவரம் ஏற்பட இடமளியோம்’

மொஹொமட் ஆஸிக்   / 2018 பெப்ரவரி 05 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

“மக்கள் விடுதலை முன்னணி நடைமுறை அரசியலில் இருக்கும்  வரை, இந்நாட்டில், மீண்டுமொரு முறை  இனக் கலவரம் ஏற்பட இடமளிக்கப் போவதில்லை”  என்று,  மக்கள் விடுதலை  முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான  அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அக்குறணை பிரதேச சபைக்காக  மக்கள் விடுதலை முன்னணி சார்பில் போட்டியிடும் போட்டியாளர்களை ஆதரித்து, பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும்  உரையாற்றுகையில்,

“இந்நாட்டை ஆள்பவர்கள், காலா காலமாக  மக்கள் மத்தியில் இனவாதத்தைத்  தூண்டி, அரசியல்செய்து வருகின்றனர். அவர்கள்  தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியிலும்  சிங்கள மக்கள் மத்தியிலும் இனவாதத்தை  ஒவ்வொரு  விதமாகத்  தூண்டி, மக்கள் மத்தியில்  பிளவுகளை  ஏற்படுத்துகின்றனர்.

“இதனால்  பல நூறு வருடங்களாக  இனங்கள் மத்தியில் பிளவு ஏற்பட்டது.  தமிழ், முஸ்லிம்  அரசியல்வாதிகள் தமிழ் பேசும் மக்கள் மத்தியிலும் சிங்கள அரசியல்வாதிகள், சிங்கள மக்கள் மத்தியிலும் இனவாதத்தைத் தூண்டி,  இனங்கள் மத்தியில் சண்டையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். ஆனால், அரசியல்வாதிகள்  ஒற்றுமையாக இருக்கின்றனர். அவர்கள் சண்டைபிடிப்பதில்லை.

“அரசியல் என்பது, இலங்கையில் மிகவும்  இலாபகரமான வியாபாரமாகும். ஒரு காலத்தில்  இலாபகரமான வியாபாரமாக போதைப்பொருள் வியாபாரம் காணப்பட்டது.  இருந்த போதும், தற்போது அதனையும் விட  மிகவும்  இலாபகரமான வியாபாரமாக அரசியல் காணப்படுகின்றது.

“இவர்களிடம் இருந்து இந்நாட்டை  மீட்கவேண்டும். அதற்கு நாங்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .