Freelancer / 2023 ஜூலை 22 , பி.ப. 01:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.சந்ரு, செ.திவாகரன்
நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஈஸ்டல் பகுதியில் ரதல்ல குறுக்கு வீதியில் நேற்று இரவு லொறியொன்று கவிழ்ந்ததில் இருவர் காயமடைந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது லொறியில் நால்வர் பயணித்த நிலையில் இருவர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மிகவும் செங்குத்தான இவ்வீதியில் சிறிய வளைவு ஒன்றில் லொறி கட்டுப்பாட்டை இழந்து தேயிலை மலையில் விழுந்துள்ளது.
குறித்த வீதியில் இதற்கு முன்னரும் பல விபத்துக்கள் ஏற்பட்டதை கருத்தில் கொண்டு இவ்வீதி செங்குத்தான சரிவுகளையும் பாரிய வளைவுகளையும் கொண்டுள்ளதால், தகுந்த தடையாளிகளை பாவித்து வாகனங்களை செலுத்த வேண்டும் என பல அறிவிப்பு பலகைகளும் இவ்வீதியில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் கனரக வாகனங்கள் பயணிப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது இருந்தும் ஒருசில கனரக வாகனங்கள் இவ்வீதியில் பயணிப்பதும் குறிப்பிடத்தக்கது .
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். R


8 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
9 hours ago