Kogilavani / 2017 ஜூலை 04 , பி.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன், ஆர்.ரமேஸ், டி.சந்ரு, கு.புஸ்பராஜா
நுவரெலியா- நானுஓயாவில் ஜூன் மாதம் 15ஆம் திகதியன்று இடம்பெற்ற விபத்து சம்பவத்தையடுத்து, அங்கு பதற்றமான நிலைமையை ஏற்படுத்தி, பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட 41 பேரின் விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களில், ஏற்கெனவே ஐவர் கைதுசெய்யப்பட்டனர். ஏனைய 36 பேரும் கடந்த சில தினங்களுக்கு முன்னரே கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
அவர்கள் அனைவரையும், நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில், இன்று (04) ஆஜர்படுத்திய போதே, மாவட்ட நீதவான் ருவான் டி சில்வா, மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .