2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

நானுஓயா விபத்தில் எட்டு பேர் படுகாயம்

R.Tharaniya   / 2025 ஜூலை 10 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தறையில் இருந்து நுவரெலியாவுக்கு சென்ற சுற்றுலா வேன் நானு ஓயா டெஸ்போட்டில் பகுதியில் வீதியை விட்டு விலகி 70 அடி பள்ளத்தாக்கில் விழுந்ததில், எட்டு பேர் படுகாயமடைந்துள்ளதாக நானுஓயாபொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்து நுவரெலியா ஹட்டன் A7 பிரதான வீதியில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த விபத்து ஏற்பட்டதாகவும் வேனுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டதாகவும் விசாரணை நடத்தி வரும் நானுஓயா,பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துக்குள்ளானதில் எட்டு பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ரஞ்சித் ராஜபக்ஷ


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .