Gavitha / 2020 டிசெம்பர் 20 , பி.ப. 01:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
“தேசத்தைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு” அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ், நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட நானுஓயா, கந்தப்பளை ஆகிய நகரங்கள் அழகுபடுத்தப்பட்டுள்ளன.
நுவரெலியா மாவட்டத்தை, சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்வதற்கான இந்தத் திட்டம் தொடர்பில், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் நாலக்க கொடஹேவா, தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோரின் ஆலோசனைக்கமைய, நுவரெலியா பிரதேச சபைத் தவிசாளர் வேலு யோகராஜ் தலைமையில், இது தொடர்பான கலந்துரையாடல், நேற்று (19), பிரதேச சபையின் நானுஓயா புதிய பல்நோக்குக் கட்டடக் கேட்போர் கூட மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது, நானுஓயாவில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ள கேபிள் கார் பயண வேலைத்திட்டம், நுவரெலியா பிரதேச சபை எல்லைப் பிரதேசத்தில் இருந்து முன்னெடுக்கப்படவுள்ளதால், இதன் பயன் பிரதேச சபைக்குக் கிடைக்கும் என்று இதன்போது தெரிவிக்கப்பட்டது.
அதேநேரத்தில் நுவரெலியா பிரதேச சபைக்கும், நுவரெலியா மாநகர சபைக்கும் இடையில் இத்திட்டம் தொடர்பில் ஏற்பட்டுள்ள கருத்து முறன்பாடுகளுக்கு தீர்வு கண்டு தருவதாகவும் தெரிவித்தார்.
இதன்போது, நானு-ஓயா நகரத்தை, உல்லாசப் பயணிகள் விரும்பத்தக்க பிரதான நகரமாக அழகுபடுத்தவும் கந்தப்பளை நகரின் அபிவிருத்தி, அதன் குறைபாடுகள் தொடர்பாகவும், தவிசாளர் வேலு யோகராஜ், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.
9 hours ago
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
22 Jan 2026