Ilango Bharathy / 2021 ஜூலை 08 , மு.ப. 06:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா
ஹப்புதளை பிரதேச செயலகத்துக்குட்பட்ட தம்பதென்ன, பண்டாரஎளிய, தியகல, மவுசாகல,
புதுக்காடு ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், கடந்த 4 நாட்களாகத் தோட்ட
நிர்வாகத்துக்கு எதிராக பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தோட்ட நிர்வாகம் 1,000 ரூபாய் சம்பளம் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டுமாயின்18
கிலோகிராம் கொழுந்தைப் பறிக்க வேண்டுமென அழுத்தம் விடுப்பதாகவும், கொழுந்து நிறை
பார்க்கும் தராசிலும் நிர்வாகம் மோசடியை செய்வதாகத் தெரிவித்தே இவர்கள்
பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன், நேற்று (7) தம்பேதன்ன தோட்டத் தொழிலாளர்கள், தேயிலைத் தொழிற்சாலை
முன்பாக ஒன்று கூடி, தோட்ட நிர்வாகத்துடன் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்ட
நிலையில்,சம்பவ இடத்துக்கு ஹப்புத்தளை பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.

இதன்போது, தோட்ட நிர்வாகத்துக்கும் தொழிலாளர்களுக்குமிடையில் 15 நிமிடங்கள்
கலந்துரையாட ஒதுக்கப்பட்டது. எனினும் தொழிலாளர்களின் கோரிக்கைக்கு நிர்வகம் இணக்கம் தெரிவிக்காத நிலையில், கொரோனா தொற்றை அடிப்படையாக வைத்து, தொழிற்சாலைக்கு முன்பாக ஒன்று கூட வேண்டாமென பொலிஸார் தெரிவித்து மக்களை கலைந்து செல்லுமாறு உத்தரவிட்டனர்.
இதனையடுத்து தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றதுடன், தீர்வு கிடைக்கும் வரை
பணிபகிஷ்கரப்பில் ஈடுபடுவுள்ளதாக அறிவித்தனர்.
37 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
1 hours ago
2 hours ago