Editorial / 2018 மார்ச் 25 , பி.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ சண்முகநாதன்
ஹட்டன் – டிக்கோயா நகர சபையின் கன்னியமர்வு, நாளை (26) பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இதன்போது, நகர சபைத் தலைவர் மற்றும் உப தலைவர் தெரிவும் இடம்பெறவுள்ளது.
ஹட்டன் – டிக்கோயா நகர சபைக்கு, வில்பிரட்புர, ஆரியகம, பொன்னகர், ஹட்டன், டன்பார், டிக்கோயா ஆகிய 6 வட்டாரங்களிலிருந்தும் மற்றும் மேலதிக உறுப்பினர் உள்ளடங்களாக 16 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் 7 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஆரியகம இரட்டை அங்கத்தவர் வட்டாரத்தில் அழகமுத்து நந்தகுமார், ராமையா ராமேஸ்வரி, பொன்னகர் வட்டாரத்தில் கந்தசாமி பாலசுப்பிரமணியம், ஹட்டன் இரட்டை அங்கத்தவர் வட்டாரத்தில் ஏ.பி.அனுர டி சில்வா, மாணிக்கம் குணசேகரன் மற்றும் டன்பார் இரட்டை அங்கத்தவர் வட்டாரத்தில் ஏ.ஜே.எம்.பாமிஸ், எஸ்.கேசவமூர்த்தி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
இ.தொ.கா. சார்பில் வில்பிரட்புர வட்டாரத்தில் எம்.டி. குமார குமாரசிறி,, டிக்கோயா வட்டாரத்தில் செல்லையா ரத்னகுமார் ஆகிய 2 உறுபினர்களுடன் விகிதாசார பட்டியலில் சடையன் பாலச்சந்திரன், எம்.ஆர்.விஜயானந்தன், ஏ.கே.சந்திரமதி, ஜி.சோமபால ஆகிய நால்வரோடு மொத்தமாக 6 உறுபினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
இவர்களோடு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் செந்தில்ராஜ் சிவதர்ஷினி, ஆர்.எம்.சசி ஆகிய இருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மேலதிக உறுபினராக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்
பி.சுப்பிரமணியம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நான்கு பெண் உறுப்பினர்கள்
தெரிவு செய்யப்பட்டுள்ள நான்கு பெண் உறுப்பினர்களுள் ராமையா ராமேஸ்வரி என்பவர் ஆரியகம இரட்டை அங்கத்தவர் வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவராவார். மேலும் மூன்று உறுப்பினர்களான ஏ.கே.சந்திரமதி, ஜி.சோமபால, செந்தில்ராஜ் சிவதர்ஷினி ஆகியோர், விகிதாசார பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட்ட்டுள்ளார்கள்.
8 minute ago
26 minute ago
44 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
26 minute ago
44 minute ago
2 hours ago