2026 ஜனவரி 23, வெள்ளிக்கிழமை

நாவலப்பிட்டி, இராகலையில் இருவருக்கு தொற்று

Kogilavani   / 2020 டிசெம்பர் 07 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், ஆ.ரமேஸ் 

நாவலப்பிட்டி, இராகலை ஆகிய பகுதிகளில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

நாவலப்பிட்டி- கெட்டபுலா மத்திய பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த 25 வயதுடைய யுவதிக்கு, நேற்று முன்தினம் (6) இரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு, கிருலப்பனை பகுதியில் பணிப்புரிந்த இவர், கடந்த 25ஆம் திகதி தனது வீட்டுக்கு வந்துள்ளார். பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதேவேளை,  வலப்பனை பிரதேசத்துக்கு உட்பட்ட இராகலை தோட்டத்தில், 61 வயது பெண்ணுக்கு  கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக,  இராகலை பிரதேசத்துக்குப் பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் அதிகாரி தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X