R.Maheshwary / 2022 ஓகஸ்ட் 08 , மு.ப. 09:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையால் பல தோட்டங்களில் நிர்மாணிக்கப்பட்டிருந்த பாலங்கள் வெள்ளத்தின் அள்ளுண்டு செல்லப்பட்டதால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
அந்த வகையில் நாவலப்பிட்டி- இங்குருஓயா பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், அவற்றைப் பார்வையிட வருகைத் தந்த போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன, வட்டவளை ஹைட்ரி தோட்டத்தில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களையும் நேரில் சென்று பார்வையிட்டார்.
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் அழைப்பை ஏற்று குறித்த பகுதிகளுக்கு சென்று மக்களின் துயரங்களை கேட்டறிந்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன, மழையால் நாவலப்பிட்டி பகுதி அதிகம் சேதங்களைச் சந்தித்துள்ளதாகத் தெரிவித்த அவர், இந்த மக்களின் அவல நிலை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் நிதியமைச்சருடன் கலந்துரையாடி பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்.

1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago