Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2018 ஜூலை 31 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ சண்முகநாதன்
கூட்டு ஒப்பந்தத்தினூடாக, தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகவே, ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றனவென, தொழிலாளர் தேசிய சங்கம் தெரிவித்துள்ளது.
இதனை, ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று, அச்சங்கத்தின் உப தலைவரும் அக்கரப்பத்தனை பிரதேச சபை உறுப்பினருமான வீ.சிவானந்தன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் கூறியுள்ள அவர், “நியாயமான சம்பள உயர்வு மற்றும் அவர்கள் நலன் சார்ந்த விடயங்கள் உரிய முறையில் தொழிலாளர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை ஏற்படுத்தவே, கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றனவே தவிர, கூட்டு ஒப்பந்தத்தைச் சீர்குலைக்கவோ அல்லது புதிய நாடகத்தை அரங்கேற்றவோ அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
கடந்த முறையைப் போல இம்முறையும் ஒரு தொகையை அறிவித்து விட்டு அது கிடைக்காமல் விமர்சனத்துக்கு ஆளாவதை விட, ஏனைய தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடலை நடத்தி, ஒரு தீர்மானத்தின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் முன்வந்துள்ளமை ஆரோக்கியமான விடயம் என்றும் அவர் பாராட்டினார்.
இந்த மாற்றம் ஏற்படுவதற்கு, ஏனைய தொழிற்சங்கங்களும் மலையக நலன்சார்ந்த அமைப்புகளும் கொடுத்த அழுத்தமே காரணம் என்று தெரிவித்த அவர், அதை, தோட்ட மக்கள் மாத்திரமல்ல அனைத்துத் தரப்பினரும் மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனரெனவும் தெரிவித்தார்.
11 minute ago
32 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
32 minute ago
36 minute ago