2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

நிறுத்தப்பட்ட பஸ் சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை

Gavitha   / 2020 டிசெம்பர் 01 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா

பதுளை மாவட்டத்தின் மூன்று பெருந்தோட்டங்களுக்கு நிறுத்தப்பட்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சேவைகளை, மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, இலங்கை போக்குவரதது சபையின் ஊவா பிராந்திய முகாமையாளர் தெரிவித்தார்.

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார், இலங்கை போக்குவரத்து சபை டிப்போ முகாமையாளர், இலங்கை போக்குவரத்து சபையின் ஊவாப் பிராந்திய முகாமையாளர் ஆகியோருக்கு இது தொடர்பாக கடிதமொன்றை அனுப்பியிருந்த நிலையில், இதற்கு பதிலளிக்கும் முகமாக இலங்கை போக்குவரத்து சபையின ஊவாப் பிராந்திய முகாமையாளர் தெரிவிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் அனுப்பியிருந்த கடிதத்தில், பதுளை மாவட்டத்தின் பதுளை- ரொசட் பெருந்தோட்டம், மடூல்சீமை - கொக்காகலை பெருந்தோட்டம், ஹல்துமுள்ள  - நீட்வூட் பெருந்தோட்டம் ஆகியவற்றுக்கு சேவைகளில் ஈடுப்பட்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் நிறுத்தப்பட்டமையால், பெருந்தோட்ட மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கிய வண்ணம் உள்ளனர் என்று குறப்பிட்டிருந்தார்.

இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக, நிறுத்தப்பட்ட பஸ் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படல் வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதையடுத்தே, மேற்படி மூன்று பெருந்தோட்டங்களுக்கும் பஸ் சேவைகளை ஆரம்பிக்க துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X